2022 புத்தாண்டு உடல்நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

உடல்நலம்



இந்த 2022 ஆம் ஆண்டு நீங்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள். உங்களுக்கு இருக்கும் உடல் உபாதைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். எந்த விதமான சிக்கலான உடல்நல பிரச்சனையாக இருந்தாலும், குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டிற்கு பெயர்வதன் பலனால் விரைவில் குணமாவீர்கள். சரியான மருந்து கிடைத்து உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் விரைவில் குணமாகும். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். மேலும் நீண்ட காலமாக நீங்கள் இழந்த தூக்கத்தை மீண்டும் பெறுவீர்கள். ஏப்ரல் 2022 வரை நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள்.


குரு உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டிலும், ராகு 4 ஆம் வீட்டிலும் மற்றும் சனி பகவான் ஜென்ம ராசியிலும் சஞ்சரித்து உங்களுக்கு மனக் கவலை மற்றும் பதற்றத்தை மே 2022 முதல் இந்த ஆண்டு வரவிருக்கும் மாதங்களில் உண்டாக்குவார்கள். கேது உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கலாம். நீங்கள் அறுவைசிகிச்சை செய்து கொள்வதை முடிந்த வரை தவிர்த்துக் கொள்வது நல்லது. உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். தினமும் காலையில் ஆதித்ய ஹிருதயம் மற்றும் ஹனுமான் சாலிசா கேட்பதால் அதிக பலத்தைப் பெறுவீர்கள்.


Prev Topic

Next Topic