2022 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

காதல்



கடந்த ஆண்டு அக்டோபர் / நவம்பர் 2021 வாக்கில் நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையில் பிரிவை சந்தித்திருந்திருக்கலாம். மேலும் இந்த பிரிவால் நீங்கள் வலி மிகுந்த அனுபவங்களையும் கசப்பான அனுபவங்களையும் கடந்து வந்திருக்கலாம். இந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் பலனால் உங்கள் வாழ்க்கையில் இது ஒரு புதிய தொடக்கமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் மீண்டும் ஒரு புதிய தொடக்கத்தை நீங்கள் செய்வீர்கள். பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்தின் மீது அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற நல்ல வாழ்க்கைத்துணை கிடைத்து ஏப்ரல் 2022 க்கு முன் உங்களுக்கு திருமணமும் நடக்கும்.


எதிர்பாராவிதமாக, மே 2022 முதல் இந்த ஆண்டு வரவிருக்கும் மாதங்களில் நீங்கள் சோதனை காலத்தை சந்திப்பீர்கள். உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் பிரச்சனைகள் ஏற்படுவதால் அது உங்கள் உறவையும் பாதிக்கும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் நவம்பர் 2022 வாக்கில் தற்காலிகமாக பிரிய வேண்டிய சூழலும் ஏற்படலாம்.

உங்களுக்கு இந்த ஆண்டு ஜென்ம சனி நடைபெறுவதால் குழந்தை பேறுக்கு திட்டமிட இது ஏற்ற காலம் இல்லை. முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால், அதற்கு முன் உங்கள் பிறந்த சாதகத்தை பார்த்து அதற்கேற்றவாறு செயல்படுவது நல்லது.



Prev Topic

Next Topic