2022 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

ஜூலை 28, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை சிறப்பான முன்னேற்றம் (60 / 100)


குரு மற்றும் சனி பகவான் வக்கிர கதி அடைவதால், உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு உங்களுக்கு நல்ல தீர்வுகள் கிடைக்கும். இந்த பாக காலகட்டத்தில் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் வேலை பளுவும் பதற்றகும்குறையும். ஆனால் உங்கள் அலுவலகத்தில் மறைமுக அரசியல் உங்களுக்கு எதிராக நடக்கும். இதனை நீங்கள் உணராமல் இருப்பீர்கள். உங்கள் குடும்பத்தினர்கள், குழந்தைகள், மற்றும் நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். இந்த பாக காலகட்டத்தை மன நிம்மதியோடு நீங்கள் கடப்பீர்கள்.
முக்கிய கிரகங்கள் வக்கிர கதி அடைவதால், நீங்கள் புண்ணியத்தலங்கள் சென்றுவர முயற்சி செய்யலாம்., தொழில் சார்ந்த பயணம் மற்றும் சுற்றுலா சார்ந்த பயணம் ஆகிய இரண்டும் உங்களுக்கு கலவையானப் பலன்களைத் தரும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் புது வீட்டிற்கு குடி பெயர முயற்சி செய்யலாம். பங்குச்சந்தை வர்த்தகத்தில் நீங்கள் சமீபத்தில் பணத்தை இழந்திருந்தால், அதில் இருந்து மிதமான முன்னேற்றத்தை காண்பீர்கள். ஆனால் பங்குசந்தையில் மேலும் பணத்தை முதலீடு செய்ய இது ஏற்ற காலம் இல்லை. அக்டோபர் 15, 2022 முதல் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது உங்களுக்கு மிகவும் வலி மிகுந்த காலமாக இருக்கலாம்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic