2022 புத்தாண்டு பயணம், வெளிநாட்டுப் பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

பயணம், வெளிநாட்டுப் பயணம் மற்றும் குடியேற்றம்


கடந்த 2021 ஆம் ஆண்டு உங்களுக்கு விசா பிரச்சனைகள் ஏற்பட்டிருந்திருக்கும். குரு மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து அக்டோபர் மற்றும் நவம்பர் 2021 வாக்கில் உங்களுக்கு கசப்பான அனுபவத்தை ஏற்படுத்தி இருந்திருப்பார்கள். குரு இந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சிறப்பான பலனைத் தருவார். உங்களுக்கு விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் பெரும் விடயங்களில் ஏப்ரல் 2022 க்கு முன் ஒப்புதல் கிடைத்துவிடும்.


வெளிநாட்டிற்கு குடியேற இது ஏற்ற நேரம். பயண சீட்டு, வாடகைக்கு கார், தங்கும் விடுதி போன்ற விடயங்களில் உங்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கும். உங்கள் வணிகம் சார்ந்த பயணம் பெரும் அளவு நல்ல வெற்றியைத் தரும். நீங்கள் மே 2022 ஐ அடைந்ததும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மே 2022 முதல் செப்டம்பர் 2022 வரையிலான காலகட்டம் பயணம் செய்ய சிறப்பாக இல்லை. உங்கள் விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் தாமதமாகலாம்.


அக்டோபர் / நவம்பர் 2022 ஐ நீங்கள் அடைந்ததும் உங்கள் விசா அந்தஸ்த்தை நீங்கள் இழக்க நேரலாம். இதன் காரணமாக உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டிய தேவையும் ஏற்படலாம். இதனால் நீங்கள் விசா பிரச்சனைகளை சரி செய்ய உங்கள் தாய்நாட்டிற்கு திரும்ப வேண்டிய தேவை ஏற்படலாம்.

Prev Topic

Next Topic