2022 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

வேலை / உத்தியோகம்


வழக்கமாக ஜென்ம சனி உத்தியோக வளர்ச்சியை மிகவும் மோசமாக பாதிக்கக்கூடும். இந்த ஆண்டும் இதற்கு எந்த விதிவிலக்கும் இல்லை. மேலும் விடயங்களை மோசமாக்கும் விதத்தில் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் மூன்றாவது முறையாக வக்கிர நிவர்த்தி அடைகிறார். நீங்கள் இந்த 2022 ஆம் ஆண்டு உங்கள் எதிர்பார்புகளை குறைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
உங்களுக்கு நல்ல செய்தி என்னவென்றால், குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரித்து ஏப்ரல் 14, 2022 வரை உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்களைத் தருவார். சற்று வேலை பளு இருந்தாலும், உங்களால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் சமாளித்து உங்கள் ப்ரோஜெக்ட்டை முடித்துவிடுவீர்கள். உங்களுக்கு வெகுமதிகள் கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மேலும் கேது உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் பலநாள் உங்களுக்கு நல்ல சம்பளத்தோடு அடுத்த நிலைக்கு பதவி உயர்வும் கிடைக்கும். ஏப்ரல் 2022 வரை வெளிநாட்டிற்கு குடிபெயர நல்ல நேரமாக உள்ளது.


ஆனால் மே 2022 ஐ அடைந்ததும் உங்களக்கு விடயங்கள் மோசமாகலாம். உங்கள் உத்தியோக வளர்ச்சியில் வேகம் குறையலாம். அலுவலகத்தில் நடக்கும் அரசியலை சமாளிப்பதில் உங்களுக்கு கடினமான நேரம் நிலவலாம். உங்களுக்கு விருப்பம் இல்லாத வேலையை செய்யச் சொல்வதால் நீங்கள் ஆர்வம் இல்லாமல் இருப்பீர்கள்.
நீங்கள் அக்டோபர் 2022 ஐ அடைந்ததும் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். ஜென்ம சனியின் பாதகமான பாதிப்புகள் அக்டோபர் முதல் டிசம்பர் 2022 வரை உள்ள காலகட்டத்தில் அதிகம் உணரப்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் உத்தியோகத்தை இழக்கும் சூழலும் ஏற்படலாம். மேலும் மோசமான சூழலில் உங்களுக்கு சட்ட பிரச்சனைகளும் ஏறபட வாய்ப்பு உள்ளது. நீங்கள் மேலாளராக இருந்தால், இந்த 2022 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் நீங்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும்.


Prev Topic

Next Topic