![]() | 2022 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
சனி பகவான் உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டில் சஞ்சரித்து தொழில் முனைவோர்களுக்கு இந்த 2022 ஆண்டு தடைகளை ஏற்படுத்துவார். குரு உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவது உங்களுக்கு ஒரு சாதகமான விடயமாகும். குரு உங்களுக்கு ஜனவரி 2022 முதல் ஏப்ரல் 2022 வரை ஒரு குறுகிய காலத்திற்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். உங்களுக்கு பல புதிய ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். அதிகரிக்கும் பண வரத்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுக்கு போதிய நிதியும் கிடைக்கும்.
உங்கள் நிதி தேவைகளை நீங்கள் எளிதாக சமாளிப்பீர்கள். சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட், இன்சூரன்ஸ் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் தங்களுக்கும் அதிகரிக்கும் புகழ், செல்வாக்கு மற்றும் வெகுமதிகளால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்கள் வணிகத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டு, அல்லது மேலும் பங்குதாரர்களை சேர்த்துக் கொண்டு ஏப்ரல் 2022 வாக்கில் ரிஸ்க் எடுப்பதை தவிர்த்து விட முயற்சி செய்வது நல்ல யோசனையாக இருக்கும்.
மே முதல் செப்டம்பர் 2022 வரை நீங்கள் கலவையானப் பலனைப் பெறுவீர்கள். ஆனால் இந்த ஆண்டின் இறுதி காலாண்டு பகுதி உங்களுக்கு மோசமாக உள்ளது. உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் உங்கள் வணிகத்தில் பணத்தை இழந்து, உங்கள் வங்கிக் கணக்கு திவாலாகும் நிலை ஏற்படலாம். எனவே ஏப்ரல் 2022 வாக்கில் உங்களுக்கு நேரம் சிறப்பாக இருக்கும் போதே நீங்கள் பாதுகாப்பாக வெளியேறிவிடுவது நல்ல யோசனையாக இருக்கும்.
Prev Topic
Next Topic