![]() | 2022 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
அக்டோபர் மற்றும் நவம்பர் 2021 வாக்கில் உங்கள் உறவுகள் சார்ந்த விடயங்களில் நீங்கள் விடயங்கள் மிகவும் மோசமாக இருந்திருக்கும். உங்களுக்கு அக்டோபர் / நவம்பர் 2021 வாக்கில் ஏறபட்ட அவனாமங்கள் மற்றும் வலி மிகுந்த சம்பவங்களை விவரிக்க வார்த்தைகள் இருக்காது. தற்போது குரு சிறப்பான நிலையில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல நிவாரணத்தை தருவார். நீங்கள் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்து விடுவீர்கள்.
உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் இருக்கும் உறவில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் எந்த அரசியலும் இருக்காது. திருமணம், புதுமனை புகு விழா, ஆண்டுவிழா போன்ற சுப நிகழ்சிகளை நீங்கள் நிகழ்த்தலாம். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெரும். கடந்த நாட்களில் உங்களை மதிக்காதவர்கள் இப்போது உங்களுடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்ள விரும்புவார்கள்.
ஆனால் மே 2022 முதல் இந்த ஆண்டின் வரவிருக்கும் மாதங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சனி பகவான் மற்றும் ராகுவால் ஏற்படும் பாதகமான தாக்கங்கள் அதிகமாக உணரப்படலாம். நீங்கள் மே 2022 முதல் செப்டம்பர் 2022 வரை மிதமான பின்னடைவுகளைக் காண்பீர்கள். ஆனால் அக்டோபர் 2022 முதல் டிசம்பர் 2022 வரை சாதகமற்ற பலன்களே ஏற்படும். இது உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் பண இழப்பை ஏற்படுத்தும், ஆனால் உங்கள் உறவுகள் சார்ந்த விடயங்கள் சமாளிக்கும் வகையிலேயே இருக்கும்.
Prev Topic
Next Topic