![]() | 2022 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
இந்த 2022 ஆம் ஆண்டு உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்களுடன் தொடங்குவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். உங்கள் வங்கிக் கடன் எந்த சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். மேலும் உங்களுக்கு கடன் தந்தவர்களுக்கு பணத்தை திருப்பித் தந்து செட்டில்மென்ட் செய்யவும் நல்ல சலுகைகள் கிடைக்கும். நீங்கள் உங்கள் கடன்களை அடைத்துவிடுவதால், உங்கள் கிரெடிட் மதிப்பும் அதிகரிக்கும். நீங்கள் முன்பு வேலை செய்த நிறுவனத்தில் இருந்து நிலுவையில் இருக்கும் சம்பளம் அல்லது இன்சூரன்ஸ் நிறுவத்தில் இருந்து ஒரு பெரியத் தொகை செட்டில்மென்ட்டாக உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு இருக்கும் நிதி பிரச்சனைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். புது வீடு வாங்கி குடி பெயர இது ஏற்ற நேரம். தங்க கட்டி அல்லது தங்க நகைகள் வாங்குவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
ஆனால் இந்த அதிர்ஷ்டங்கள் ஏப்ரல் 2022 வரை மட்டுமே. வரவிருக்கும் ஏப்ரல் 14, 2022 அன்று நிகழும் குரு, மற்றும் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு கலவையானப் பலன்களைத் தரும். செப்டம்பர் 2022 வரை தாமதங்கள் ஏற்படலாம். அக்டோபர் 2022 முதல் டிசம்பர் 2022 வரை விடயங்கள் மேலும் மோசமாகலாம். நவம்பர் 2022 வாக்கில் அதிகரிக்கும் கடனால் நீங்கள் பீதியடையும் நிலையில் இருப்பீர்கள். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு வங்கியில் கடன் வாங்க சூரிட்டி தருவதை தவிர்த்துவிடுவது நல்லது. இந்த 2022 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டு பகுதியில் நீங்கள் பண விடயங்களில் ஏமாற்றப்படலாம்.
Prev Topic
Next Topic