![]() | 2022 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | முதல் பாகம் |
ஜனவரி 01, 2022 முதல் ஏப்ரல் 14, 2022 வரை பெரிய அளவிலான அதிர்ஷ்டங்கள் (85 / 100)
குரு உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டில் இருந்து நெருக்கமாக உங்கள் ஜென்ம ராசியை பார்வை இடுவதால் இது உங்களுக்கு ஒரு சிறப்பான காலகட்டமாக இருக்கும். கேது உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சி மற்றும் வெற்றியை அதிகரிப்பார். சனி பகவானும் செவ்வாயும் நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை என்றாலும், குருவின் பலத்தால் அவர்களின் தாக்கம் குறைவாகவே இருக்கும். உங்களுக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகள் சரியாகும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக நீங்கள் சரி செய்து விடுவீர்கள். கடந்த காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட வலிமிகுந்த சம்பவங்களில் இருந்து நீங்கள் வெளியில் வருவீர்கள்.
சுப காரியங்கள் நிகழ்த்த இது சிறப்பான நேரம். திருமண வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக குழந்தை பேறுகாக காத்திருந்த தம்பதியினர் அதற்கான பாக்கியத்தைப் பெறுவார்கள். உங்கள் வேலை பளு மிதமாகவே இருக்கும். உங்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். உங்கள் உத்தியோகத்தில் மாற்றம் செய்ய இது ஏற்ற நேரம். தொழில்முனைவோர்கள் சிறப்பான திருப்பத்தைப் பெறுவார்கள். இந்த பாகத்தில் உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். ஆனால் நீங்கள் அஷ்டம சனி காலத்தில் இருப்பதால் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.
புது வீடு வாங்கி குடி பெயர இது ஏற்ற நேரம். மேலும் உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் சொத்துக்களிலும் முதலீடு செய்யலாம். இந்த பாகத்தில் தொலைதூர பயணம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்களைத் தரும். உங்கள் விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் ஒப்புதல் பெரும்.
Prev Topic
Next Topic