2022 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

காதல்



கடந்த ஆண்டு குறிப்பாக அக்டோபர் / நவம்பர் 2021 வாக்கில் உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் பிரிவை சந்தித்திருந்திருப்பீர்கள். உங்களுக்கு உங்கள் பிரிவால் வலியின் கசப்பான அனுபவங்களும் ஏற்பட்டிருக்கும். இந்த 2022 புத்தாண்டின் தொடக்கத்தில் குரு உங்கள் ராசியின் 9 ஆம் வீடான பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆவதால் நீங்கள் மீண்டும் ஒன்றாக சேர்ந்து உங்கள் வாழ்க்கையைத் தொடங்க ஏற்ற காலமாக இருக்கும். உங்கள் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்தின் மீது நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், ஏப்ரல் / மே 2022 க்கு முன்னரே உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை கண்டறிந்து திருமணமும் செய்வீர்கள்.


திருமணம் ஆன தம்பதியினர் நல்ல மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்கான பாக்கியத்தைப் பெறுவார்கள். இயற்கையாகவோ அல்லது மருத்துவ சிகிச்சை மூலமாகவோ உங்களுக்கு குழந்தை பாக்கியம் பெரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள்.

எதிர்பாராவிதமாக, மே 2022 முதல் இந்த ஆண்டின் மீதமுள்ள மாதங்களில் நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள். உங்கள் உத்தியோகம் பாதிக்கப்படலாம், மேலும் நிதி பிரச்சனைகளும் ஏற்படலாம். இதனால் உங்கள் உறவும் பாதிக்கப்படலாம். நீங்கள் பொறுமையாக இருந்தால் உங்கள் காதல் வாழ்க்கை சார்ந்த விடயங்கள் உங்கள் கட்டுபாட்டிற்குள் இருக்கும்.




Prev Topic

Next Topic