![]() | 2022 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2022 புத்தாண்டு பலன்கள் – மிதுன ராசி (Gemini Moon Sign). கடந்த ஆண்டு குறிப்பாக அக்டோபர் மற்றும் நவம்பர் 2021 வாக்கில் நீங்கள் அதிகப்படியான பிரச்சனைகளை சந்தித்திருந்திருப்பீர்கள். ஆனால், இந்த புத்தாண்டில் நீங்கள் மகிழ்ச்சியான பலன்களை எதிர்பார்க்கலாம். குரு முழு பலத்துடன் உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டில் ஜென்ம ராசியை பார்வையிடுகிறார். கேது உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உங்கள் அதிர்ஷ்டங்களை பல மடங்கு அதிகரிப்பார். சனி பகவான் மற்றும் ராகுவால் ஏற்படும் பாதகமான பலன்கள் இதனால் இல்லாமல் இருக்கும். ஏப்ரல் 14, 2022 வரை நீங்கள் எதை செய்தாலும் அதில் பெரும் அளவு வெற்றியைப் பெறுவீர்கள்.
ஏப்ரல் 14, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரையிலான காலகட்டம் உங்களுக்கு சுமாராக இருக்கும். உங்களால் பெரிய அளவில் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அக்டோபர் 23, 2022 முதல் டிசம்பர் 31, 2022 வரையிலான இறுதி மேலும் மோசமாக உள்ளது. நீங்கள் கவனமாக இல்லை என்றால், ஜனவரி ௦1, 2022 முதல் ஏப்ரல் 14, 2022 வரை உங்களுக்கு இருக்கும் அதிர்ஷ்டங்களை நீங்கள் இழக்க நேரலாம்.
வெற்றி பெற்று உங்கள் வாழ்க்கையில் மேலும் முன்னோக்கி செல்ல நீங்கள் உங்கள் பலம் மற்றும் பலவீனம் இரண்டையும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். மொத்தத்தில் ஏப்ரல் 14, 2022 க்கு முன் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பற்றிக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நல்ல நிலையில் செட்டிலாகிவிட முயற்சிப்பது நல்லது.
Prev Topic
Next Topic