![]() | 2022 புத்தாண்டு திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் |
திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்
திரைநட்சத்திரங்கள், தயாரிப்பளர்கள், இயக்குனர்கள், விநியோகத்தர்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்கள் இந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொற்காலத்தை காண்பார்கள். குரு உங்கள் ராசியின் 9 ஆம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதின் பலத்தால் நீங்கள் சிறப்பான வெகுமதிகளைப் பெறுவீர்கள். நீங்கள் நல்ல உற்சாகத்தோடு இருப்பதால் ஊடகங்களும், மக்களும் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். ஜனவரி 2022 முதல் ஏப்ரல் 2022 வரை வெளியாகும் உங்கள் படம் பெரும் அளவு வெற்றிப் பெரும். ஜுன் 2022 வரை உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் இருக்கும்.
அனால் ஜூலை 2022 முதல் உங்களுக்கு பின்னடைவுகள் ஏற்படலாம். நீங்கள் உங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகளை இழக்க நேரலாம். நீங்கள் முன்பே ஒப்பந்தம் செய்த ப்ரோஜெக்ட்டுகள் ஆகஸ்ட் 2022 முதல் டிசம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில் இரத்தாகும் வாய்ப்பும் உள்ளது. திரைபாடத் தயாரிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஜூலை 2022 முதல் ரிஸ்க் எடுப்பதை தவிர்த்துவிட வேண்டும். மொத்தத்தில் ஜூன் 2022 வரை உங்களுக்கு சிறப்பான நேரமாக இருப்பதால் நீங்கள் அதனை பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் செட்டிலாகி விட முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic