![]() | 2022 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | மூன்றாம் பாகம் |
ஜூலை 28, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை நல்ல நிவாரணம் (60 / 100)
இது சிறப்பான நேரம் என்று சொல்ல முடியாது, ஆனால் நீங்கள் கடந்த பாகத்தை விட நல்ல மாற்றங்களை இங்கு காண்பீர்கள். குரு மற்றும் சனி பகவான் வக்கிர கதி அடைவதால், உங்களுக்கு பிரச்சனைகளில் இருந்து வெளிவர நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் இந்த பாகத்தில் உங்கள் ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவீர்கள்.
உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் குறையும். ஆனால் மறைமுக அரசியாலை உங்களால் உணர முடியாமல் இருக்கும். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்கள், குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். உங்களால் இந்த காலகட்டத்தை நிம்மதியாக கடக்க முடியும். ராகு உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் நிதி நிலையில் முன்னேற்றத்தையும் தருவார்.
முக்கிய கிரகங்கள் வக்கிர கதி அடைவதால், நீங்கள் புண்ணியத்தலங்கள் செல்லத் திட்டமிடலாம். தொழில் சார்ந்த பயணம் மற்றும் சுற்றுலா உங்களுக்கு கலவையானப் பலனைத் தரும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் புது வீட்டிற்கு குடிபெயர முயற்சிக்கலாம். நீங்கள் பங்கு சந்தையில் கடந்த காலத்தில் பணத்தை இழந்திருந்தால், இப்போது அதில் இருந்து வெளிவர சற்று வாய்புகள் கிடைக்கும். ஆனால் புதிதாக பணத்தை பங்குசந்தையில் முதலீடு செய்வது நல்ல யோசனையாக இருக்காது.
அடுத்து வரவிருக்கும் பாகம் அதிக வலி மிகுந்ததாக இருக்கும் என்பதால் நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்துவதை தவிர்த்துவிடுவது நல்லது. நீங்கள் உங்கள் பிறந்த சாதகத்தை சார்ந்தே முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும்.
Prev Topic
Next Topic