![]() | 2022 புத்தாண்டு பயணம் மற்றும் குடியேற்றப் பலன்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | பயணம் மற்றும் குடியேற்றப் பலன்கள் |
பயணம் மற்றும் குடியேற்றப் பலன்கள்
கடந்த 2021 ஆம் ஆண்டு விசா பிரச்சனைகள் மற்றும் குடியேற்றம் சார்ந்த விடயங்களில் உங்களுக்கு தேக்க நிலை ஏற்பட்டிருக்கும். அக்டோபர் 2021 வாக்கில் குரு மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு கசப்பான அனுபவங்களை தந்திருப்பார்கள்.
குரு உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு பயணம் செய்வதற்கு சிறப்பாக உள்ளது. உங்கள் விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் ஏப்ரல் 2022 க்கு முன் ஒப்புதல் பெற்றுவிடும். வெளிநாட்டிற்கு குடிபெயர இது ஏற்ற நேரம். உங்களுக்கு பயண சீட்டு, வாடகைக்கு கார், தாங்கும் விடுதி போன்ற விடயங்களில் நல்ல சலுகைகள் கிடைக்கும். உங்கள் தொழில் சார்ந்த பயணம் உங்களுக்கு பெரும் அளவு வெற்றியைத் தரும்.
நீங்கள் முன்பே வெளிநாட்டில் வசிப்பவர் என்றால், உங்கள் பெற்றோர்கள் விடுமுறையில் உங்களைக் காண வருகைத் தருவார்கள். உங்களுக்கு கிடைக்கும் இந்த அதிர்ஷ்டங்கள் மே 2022 வரை மட்டுமே. ஜூன் 2022 முதல் டிசம்பர் 2022 வரை பயணம் உங்களுக்கு சிறப்பாக இல்லை. உங்கள் விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் தாமதமாகலாம். அக்டோபர் முதல் டிசம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில் விசா ஸ்டாம்பிங் செய்யும் முயற்சியை தவிர்த்துவிடுவது நல்லது.
Prev Topic
Next Topic