![]() | 2022 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
சனி பகவான் உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டில் இந்த 2022 ஆம் ஆண்டு சஞ்சரிப்பார். இது அஷ்டம சனி என்பதால் உங்கள் உத்தியோகம் பாதிக்கப்படலாம். ஆனால் குரு மற்றும் கேதுவின் சாதகமான நிலையால் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்கள் நீங்கள் சிறப்பான பலனைப் பெறுவீர்கள். உங்களுக்கு வேலை பளு சுமாராக இருக்கும். உங்களால் உங்கள் ப்ரோஜெக்ட்டை சரியான நேரத்தில் முடித்துவிடவும் முடியும். உங்களுக்கு வெகுமதிகள் கிடைப்பதாலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
ஏப்ரல் 2022 வரை வெளிநாட்டிற்கு குடிபெயர நல்ல நேரமாக உள்ளது. நீங்கள் விரும்பிய இடத்திற்கு இட மாற்றம். உள்ளாட்டிலேயே இட மாற்றம் மற்றும் குடியேற்றப் பலன்கள் போன்ற பலன்களை உங்கள் நிறுவனத்தில் இருந்து பெறுவீர்கள். ஆனால் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் விடயங்கள் சிறப்பாக இல்லாமல் போகலாம். உங்கள் உத்தியோக வளர்ச்சியில் தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் அலுவலகத்தில் ஏற்படும் அரசியலை சமாளிப்பதில் கடினமான நேரம் ஏற்படலாம்.
அக்டோபர் 2022 ஐ நீங்கள் அடைந்ததும் கவனமாக இருக்க வேண்டும். அக்டோபர் மற்றும் நவம்பர் 2022 வாக்கில் அஷ்டம சனியின் தாக்கம் கடுமையாக இருக்கலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்கள் உத்தியோகத்தை நீங்கள் இழக்கும் சூழல் ஏற்படலாம். மேலும் மோசமான சூழலில் நீங்கள் சட்ட பிரச்சனைகளையும் சந்திக்க நேரலாம். நீங்கள் மேலாளராக இருந்தால், 2022 இன் இறுதி காலாண்டில் மிகவம் அதிகமாக கவனமாக இருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic