![]() | 2022 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
சனி பகவான் உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது தொழில்முனைவோர்களுக்கு ஒரு சிறப்பான செய்தியாகும். உங்கள் மறைமுக எதிரிகள் பலம் இழந்து உங்கள் முன் சரணடைவார்கள். உங்கள் போட்டியாளர்கள் உங்களுடை புதுமையான யோசனைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இருப்பார்கள். மேலும் நீங்கள் உங்கள் திட்டங்களை செயல்படுத்தவும் செய்வீர்கள். குரு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டங்களை பல மடங்கு அதிகரிப்பார். மேலும் இது உங்களுக்கு ராஜ யோகமாகவும் அல்லது பொற்காலமாகவும் உங்கள் வாழ்க்கையில் ஏப்ரல் 2022 வரை இருக்கும்.
நீங்கள் தொடர்ந்து வளர்ச்சியைக் காண்பீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் எதை செய்தாலும் அதில் பெரும் அளவு வெற்றியைப் பெறுவீர்கள். சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், கமிசன் ஏஜெண்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் தங்களுக்கு நல்ல வெகுமதிகள் கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருப்பார்கள்/ உங்கள் வணிகத்தை நல்ல விலைக்கு கொடுக்கவும் வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் நீங்கள் ஒரே இரவில் பணக்காரராகும் வாய்ப்பும் உள்ளது. ஏப்ரல் 2022 வரை நீங்கள் நல்ல அதிர்ஷ்டங்களைப் பெறுவீர்கள்.
மே 2022 முதல் நவம்பர் 2022 வரை உங்கள் வளர்ச்சியில் வேகம் குறையும் மேலும் நீங்கள் பின்னடைவுகளையும் சந்திப்பீர்கள். உங்கள் மறைமுக எதிரிகளாலும் போட்டியாளர்களாலும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் நீங்கள் தேக்க நிலையை காண்பீர்கள். டிசம்பர் 2022 ஐ அடைந்ததும் விடயங்கள் முற்றிலுமாக உங்களுக்கு எதிராக மாறும். நீங்கள் கவனமாக இல்லை என்றால் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்கள் உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டங்களை நீங்கள் இழக்க நேரலாம். டிசம்பர் 2022 முதல் ஏப்ரல் 2023 வரை நீங்கள் உங்கள் தொழிலில் பெரும் அளவு இழப்புகளை சந்திக்க நேரலாம்.
Prev Topic
Next Topic