![]() | 2022 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | கல்வி |
கல்வி
கடந்த 2021 ஆம் ஆண்டு குரு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆனதால் மாணவர்கள் கலவையானப் பலனை பெற்றிருப்பார்கள். தற்போது இந்த 2022 ஆம் ஆண்டு உங்களுக்கு சிறப்பாக உள்ளத. உங்களுக்கு வரும் நாட்களில் படிப்பில் அதிக ஆர்வம் உண்டாகும். நீங்கள் கடந்த நாட்களில் செய்த தவறுகளை இப்போது உணரத் தொடங்குவீர்கள். பரிச்சையை சிறப்பாக எழுதுவீர்கள். உங்களுக்கு எளிதாக சிறந்த கல்லூரி மற்றும் பல்கலைகழகத்தில் சேர்க்கை கிடைக்கும். உங்களுக்கு உங்கள் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். நீங்கள் முதுநிலை பட்டம் / Ph.D படிக்கும் மாணவராக இருந்தால், மார்ச் / ஏப்ரல் 2022 வாக்கில் உங்கள் தீசிஸ் ஒப்புதல் பெரும்.
ஆனால் மே 2022 முதல் உங்களுக்கு பின்னடைவுகள் ஏற்படலாம். நீங்கள் பரிச்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றால், கடுமையாக உழைக்க வேண்டும். அதிக படிக்க வேண்டிய அழுத்தம் நிறைந்த சூழல் ஏற்படலாம். உங்கள் மனம் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கும். டிசம்பர் 2022 ஐ அடைந்ததும் நீங்கள் உலவியில் ரீதியாக பாதிக்கப்படலாம். மேலும் நீங்கள் தனிமையாக இருப்பதையும் உணருவீர்கள், இது உங்களுக்கு மனக் கவலையை ஏற்படுத்தும். நீங்கள் நல்ல ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்றும் நவம்பர் 2022 நான்காம் வாரம் முதல் ஏற்படவிருக்கும் கடுமையான காலகட்டத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic