![]() | 2022 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
இந்த புத்தாண்டு உங்களுக்கு பெருமளவிலான அதிர்ஷ்டங்களோடு தொடங்குகிறது. நீங்கள் பொற்காலத்தை காண்பீர்கள். திருமணம் ஆனவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். உங்களுக்கு நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து வரும் நாட்களில் நல்ல உதவிகள் கிடைக்கும். உங்கள் மகன் மற்றும் மகளுக்குத் திருமணம் நிச்சயிக்க இது சிறப்பான நேரம். சுப காரியங்கள் நிகழ்த்துவதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெரும்.
ஆனால் நீங்கள் மே 2022 ஐ அடைந்ததும் உங்கள் அதிர்ஷ்டம் குறையும். சனி பகவானின் நல்லப் பலன்களை விட குரு மற்றும் ராகுவின் பாதகமான பலன்கள் அதிகம் உணரப்படும். உங்கள் குடும்ப சூழலில் புதிதாக பிரச்சனைகள் வரத் தொடங்கும். நவம்பர் அல்லது டிசம்பர் 2022 ஐ அடைந்ததும் நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள். பிரச்சனைகள் மெதுவாக உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கத் தொடங்கும். உங்கள் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் பட்டவர்கள் இப்போது உங்களுக்கு பிரச்சனைகளைத் தரத் தொடங்குவார்கள். டிசம்பர் 2022 வாக்கில் உங்கள் குடும்பத்தில் நடக்கும் அரசியல் உங்களை மிகவும் மோசமாக பாதிக்கும்.
Prev Topic
Next Topic