![]() | 2022 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | வழக்கு |
வழக்கு
சனி பகவான் உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிலும் குரு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீதிமன்ற வழக்குகள் சார்ந்த விடயங்கள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்களால் போதிய சாட்சிகளுடன் உங்கள் தரப்பு ஞாயங்களை நிரூபிக்க முடியும். உங்களுக்கு சரியான வழக்கறிஞர் கிடைத்து நீங்கள் உங்கள் வழக்கில் வெற்றி பெரும் வாய்ப்பும் உள்ளது. கிரிமினல் வழக்கில் இருந்து மே 2022 க்கு முன் நீங்கள் வெளியில் வந்துவிடுவீர்கள். சனி பகவான் மற்றும் குருவின் பலத்தால் உங்கள் பூர்வீக சொத்துகள் சார்ந்த விடயங்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் சொத்துகளில் உங்கள் பெயரில் பதிவு செய்யவும் மாற்றவும் இது ஏற்ற நேரம். பெருமாளை வணங்கி உங்கள் நிதி நிலையில் நல்ல வெற்றியையும் லாபத்தையும் பெறுங்கள்.
மே 2022 ஐ நீங்கள் அடைந்ததும், அஷ்டம குருவால் விடயங்கள் உங்களுக்கு எதிராக மாறத் தொடங்கும். மே அல்லது ஜூன் 2022 வாக்கில் உங்களுக்கு இருந்த பிரச்சனைகளை நீங்கள் கவனிக்காமல் இருந்திருக்கலாம். சனி பகவான் இந்த காலகட்டத்தில் உங்களை பாதுகாத்திருந்திருப்பார். ஆனால் டிசம்பர் 2022 ஐ நீங்கள் அடைந்ததும், விடயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கத் தொடங்கும். டிசம்பர் 2022 முதல் ஏப்ரல் 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு புதிய வழக்குகள் தோன்றும், அது உங்கள் பெயரையும் புகழையும் பாதிக்கும் வகையில் இருக்கலாம்.
Prev Topic
Next Topic