![]() | 2022 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | காதல் |
காதல்
சனி பகவான் உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிலும் குரு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் காதல் வாழ்க்கையில் பொற்காலத்தை உண்டாக்குவார். நீங்கள் காதலிப்பீர்கள். நீண்ட கால அடிப்படையில் உங்கள் கனவுகள் நினைவாகும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீண்ட காலமாக நீங்கள் குழந்தை பேறுக்காக காத்திருந்தால், அதற்கான பாக்கியத்தைப் பெறுவீர்கள். இயற்கையாகவோ அல்லது மருத்துவ சிகிச்சையாலோ நீங்கள் இந்த பாக்கியத்தைப் பெறுவீர்கள். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். ஏப்ரல் 2022 வரை திருமணம் செய்து கொள்ள சிறப்பான நேரமாக உள்ளது.
மே 2022 முதல் நவம்பர் 2022 வரை கிரகங்கள் வக்கிர கதி அடைவதாலும் அதி சரமாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் கலவையானப் பலனைப் பெறுவீர்கள். ஆனால் நவம்பர் 24, 2022 முதல் நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களை சந்திக்க நேரலாம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் காதலிப்பவருடன் உங்களுக்கு சண்டைகளும் கடுமையான வாக்குவாதங்களும் ஏற்படலாம். நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்ள மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். மேலும் ஏப்ரல் 2023 வரை நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில் நீங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பிரிந்துவிட வாய்ப்பு உள்ளது.
Prev Topic
Next Topic