2022 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

ஏப்ரல் 14, 2022 முதல் ஜூலை 28, 2022 வரை சோதனை காலத்தின் தொடக்கம் (35 / 100)



கடந்த பாகத்தில் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மைல்கல்லை எட்டி இருப்பீர்கள். தற்போது குரு உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டிலும் சனி பகவான் 7 ஆம் வீட்டில் அதி சரமாய் சஞ்சரித்தும், ராகு உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் நீங்கள் குறிப்பிடத்தக்க பின்னடைவுகளை சந்திக்க நேரலாம். கேது உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் நண்பர்கள் மூலம் உங்களுக்கு உதவிகளை செய்வார்.


இந்த வாகத்தில் விடயங்கள் திருப்பம் பெற்று உங்களுக்கு எதிராக மாறும். நீங்கள் எதை செய்தாலும் அதில் தாமதங்களையும் பின்னடைவுகளையும் சந்திப்பீர்கள். கண் திருஷ்டி மற்றும் பொறாமையால் ஏற்படும் தாக்கங்களை நீங்கள் உணருவீர்கள். உங்கள் மறைமுக எதிரிகள் இந்த பாகத்தில் அதிக பலம் பெறுவார்கள். உங்கள் குடும்பத்தில் அரசியல் அதிகரிக்கும். இதனால் உங்கள் மன நிம்மதியும் பாதிக்கப்படும். உக்னால் குழந்தைகள் உங்களிடம் புதிய தேவைகளை முன் வைப்பார்கள். நீங்கள் காதலித்துக் கொண்டிருந்தாள், இந்த காலகட்டத்தில் மிகவும் பாதுகாப்பில்லாத உணர்வோடு இருப்பீர்கள்.
உங்கள் உத்தியோக வாழ்க்கை அலுவலக்த்தில் நடக்கும் அரசியலால் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். உயர் நிலை நிர்வாகத்தில் இருப்பவர்கள் உங்கள் செயல்திறனைக் கண்டு மகிழ்ச்சி அடையமாட்டார்கள். அஷ்டம சனியின் அனைத்து பாதகமான தாக்கத்தை நீங்கள் இப்போது அதிகம் உணர மாட்டீர்கள். ஆனால் அலுவலகத்தில் அனைத்து விடயங்களும் உங்களுக்கு எதிராக நடக்கத் தொடங்குவதை நீங்கள் கவனிப்பீர்கள். தொழில்முனைவோர்கள் தங்கள் ப்ரோஜெக்ட்டுகள் இரத்தாவதால் இழப்புகளை சந்திப்பார்கள். மேலும் வாடிக்கையாளர் மற்றும் பங்குதாரர்களிடம் இருந்து வழக்குகளையும் சந்திக்க நேரலாம்.


பயணம் நீங்கள் எதிர்பார்த்த பலனைத் தராமல் போகலாம், மாறாக உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். உங்கள் விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் ஒப்புதல் பெறாமல் போகலாம். நீங்கள் உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து மீண்டும் உங்கள் தாய்நாட்டிற்கே திரும்பும் சூழல் வரலாம். நீங்கள் பங்குச்சந்தை முதலீடுகளை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும். சொத்துகள் வாங்க அல்லது முதலீடுகள் செய்ய இது ஏற்ற நேரம் இல்லை.

Prev Topic

Next Topic