2022 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்



இந்த ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. பல ஆண்டுகளாக உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளில் இருந்து நீங்கள் வெளியில் வந்துவிடுவீர்கள். உங்களுக்கு ஏப்ரல் 2022 வரை பங்குச்சந்தை வர்த்தகத்தில் விண்ணைத் தொடும் லாபம் உண்டாகும். ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் ஒரு குறிகிய காலத்தில் உங்களை பணக்காரராகவும் மாற்றலாம். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் ஏப்ரல் 2022 க்கு முன் கோட்டீஸ்வரராகும் வாய்ப்பும் உள்ளது. புது வீடு வாங்க அல்லது சொத்துக்களில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரமாக இருக்கும்.



ஆனால் மே 2022 முதல், நீங்கள் இழப்புகளை சந்திக்க நேரலாம். ஜூன் 2022 முதல் பங்குச்சந்தை வர்த்தகத்தை தவிர்த்துவிடுவது நல்லது. குரு மற்றும் ராகு பெயர்ச்சி பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு சாதகமாக இல்லை. நீங்கள் கவனமாக இல்லை என்றால், நீங்கள் டிசம்பர் 2022 ஐ அடைந்ததும் உங்களுக்கு நிதி இழப்புகள் ஏற்படத் தொடங்கும். நீங்கள் ஜூன் 2022 முதல் பாதுகாப்பான முதலீடுகளை செய்ய முயற்சிக்க வேண்டும். அதிர்ஷ்ட சீட்டு மற்றும் சூதாட்டம் ஆகியவை உங்களுக்கு அதிக பண இழப்பை ஏற்படுத்துவதோடு நீங்கள் அதற்கு அடிமையாகிவிட நேரலாம் என்பதால் அவற்றை முற்றிலுமாக தவிர்த்துவிடுவது நல்லது.



Prev Topic

Next Topic