![]() | 2022 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
இந்த 2022 ஆம் ஆண்டு உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்களுடன் தொடங்குவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். உங்கள் வங்கிக் கடன்கள் எந்த சிக்கலும் இன்றி விரைவாக ஒப்புதல் பெரும், மேலும் உங்குக்கு கடன் தந்தவர்களிடம் இருந்தும் கடனை எளிதாக திருப்பித் தந்துவிட உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் கடனை நீங்கள் அடைத்துவிடுவதால், உங்கள் கிரெடி மதிப்பும் அதிகரிக்கும். நீங்கள் முன்பு வேலை பார்த்த நிறுவனம் அல்லது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு ஒரு பெரியத் தொகை செட்டில்மென்ட்டாக கிடைக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து நீங்கள் வெளியில் வருவீர்கள். புது வீடு வாங்கி குடி பெயர இது ஏற்ற நேரம். தங்க கட்டி அல்லது நகைகள் வாங்குவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
ஆனால் உங்களுக்கு கிடைத்துள்ள இந்த அதிர்ஷ்டங்கள் ஏப்ரல் 2022 வரை மட்டுமே. வரவிருக்கும் ஏப்ரல் 14, 2022 அன்று நடக்கும் குரு, ராகு மற்றும் கேது பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக இல்லை. எனவே உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். உங்கள் நிதித் தேவைகளை சமாளிக்க நீங்கள் கடன் வாங்க நேரலாம். நவம்பர் 2022 வாக்கில் உங்கள் கடன் அதிகரித்துக் கொண்டே போவதால் நீங்கள் பீதி அடையும் நிலையில் இருப்பீர்கள். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு வங்கியில் கடன் வாங்க சூரிட்டி தருவதை தவிர்த்துவிடுவது நல்லது. செப்டம்பர் 2022 க்கு பிறகு பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic