2022 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

ஜனவரி 01, 2022 முதல் ஏப்ரல் 14, 2022 வரை நல்ல அதிர்ஷ்டங்கள் (85 / 100)


இந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்த்தில் குரு உங்கள் ஜென்ம ஆசியை 7 ஆண்டுகளுக்கு பிறகு பார்வை இடுதால் சிறப்பாக உள்ளது. ராகு உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. சனி பகவான் மற்றும் கேது நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை என்றாலும், குருவின் பலத்தால் நீங்கள் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் உடல் நலம் இந்த பாகத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெரும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்வீர்கள். கடந்த நாட்களில் உங்களுக்கு ஏற்பட்ட வலி மிகுந்த சம்பவங்களில் இருந்து நீங்கள் வெளியில் வருவீர்கள்.
சுப காரியங்கள் நிகழ்த்த இது சிறப்பான நேரமாக உள்ளது. திருமணம் ஆனவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீண்ட காலமாக குழந்தை பேறுக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்கான பாக்கியத்தைப் பெறுவார்கள். உங்கள் வேலை பளு மிதமாக இருக்கும். உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். வேறு வேலைக்கு முயற்சிக்க இது ஏற்ற நேரம். தொழில்முனைவோர்கள் நல்ல திருப்பத்தைப் பெறுவார்கள். உங்கள் நிதி நிலை இந்த பாகத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெரும். பங்கு சந்தை வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். சனி பகவான் மற்றும் கேது சாதகமற்ற நிலையில் இந்த பாகத்தில் சஞ்சரிப்பதால் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் செய்யும் போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


புது வீடு வாங்கி குடி பெயர இது ஏற்ற நேரம். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் சொத்துகளில் முதலீடு செய்யலாம். நீண்ட தூர பயணம் உங்களுக்கு இந்த பாகத்தில் நல்ல அதிர்ஷ்டத்தை தரும். உங்கள் விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் ஒப்புதல் பெரும். ஏப்ரல் 14, 2022 க்கு முன் உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாகி விட முயற்சி செய்யுங்கள். அதன் பிறகு வரவிருக்கும் மாதங்கள் உங்களுக்கு சிறப்பாக இல்லாமல் போகலாம்.


Prev Topic

Next Topic