2022 புத்தாண்டு உடல்நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

உடல்நலம்



இந்த 2022 ஆம் ஆண்டில் உங்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்களுக்கு இருக்கும் உடல் உபாதைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். எந்த விதமான சிக்கலான பிரச்சனையாக இருந்தாலும், அதற்கு சரியான மருத்துவத்தை நீங்கள் குருவின் பலத்தால் பெறுவீர்கள். உங்களுக்கு சரியான மருந்து கிடைத்து விரைவில் குணமாவீர்கள். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். மேலும் உங்களுக்கு நல்ல தூக்கம் வரும். நீங்கள் தேவைப்பட்டால் அருவைசிகிசையும் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு ஏப்ரல் 2022 வரை மட்டுமே இருக்கும்.



மே 2022 முதல் குரு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிலும், கேது உங்கள் ஜென்ம ராசியிலும் சனி பகவான் 4 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு மனக் கவலை மற்றும் பதற்றத்தை உண்டாக்குவார்கள். ராகு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் உங்கள் உடல் உபாதைகள் அதிகரிக்கும். நீங்கள் முடிந்த வரை இந்த காலகட்டத்தில் அறுவைசிகிச்சை செய்து கொள்வதை தவிர்த்துவிடுவது நல்லது. உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். தினமும் காலையில் ஆதித்ய ஹிருதயம் மற்றும் ஹனுமான் சாலிசா கேட்பதால் பலம் பெறுவீர்கள்.



Prev Topic

Next Topic