2022 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

காதல்



கடந்த ஆண்டு குறிப்பாக அக்டோபர் / நவம்பர் 2021 வாக்கில் நீங்கள் அதிக சவால்களை உங்கள் காதல் வாழ்க்கையில் சந்தித்திருந்திருப்பீர்கள்.இந்த 2022 ஆம் புத்தாண்டில் குரு நல்ல பலம் பெற்றிருப்பதால், நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். நீங்கள் காதலிப்பவரை விட்டு பிரிந்திருந்தால், மீண்டும் அவருடன் இணைந்து உங்கள் வாழ்க்கையைத் தொடங்க முயற்சிக்க இது நல்ல நேரம். உங்கள் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், ஏப்ரல் / மே 2022 வாக்கில் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை பெற்று திருமணமும் செய்து கொள்வீர்கள்.


திருமணம் ஆனவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீண்ட காலமாக குழந்தை பேறுக்காக நீங்கள் காத்திருந்தால், அதற்கான பாக்கியத்தை இப்போது பெறுவீர்கள். இயற்கையாகவோ அல்லது மருத்துவ சிகிச்சையாலோ நீங்கள் குழந்தை பெரும் வாய்ப்பை பெறுவீர்கள். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள்.

எதிர்பாராவிதமாக, மே 2022 முதல் இந்த ஆண்டு பின் வரவிருக்கும் மாதங்கள் உங்களுக்கு சோதனை காலமாக இருக்கும். உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் பிரச்சணைகள் ஏற்படலாம், இதனால் உங்கள் காதல் வாழ்க்கையும் பாதிக்கப்படலாம். நீங்கள் பொறுமையாக இருந்து விடயங்களை சமாளிக்க முயற்சிக்க வேண்டும். மே அல்லது ஜூன் 2023 வாக்கில் தான் நீங்கள் திருமணம் செய்து கொள்ள நல்ல நேரம் உண்டாகும்.




Prev Topic

Next Topic