![]() | 2022 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2022 புத்தாண்டு பலன்கள் - துலாம் ராசி (Libra Moon Sign). இந்த புத்தாண்டு உங்களுக்கு நல்லப் பலன்களுடன் தொடங்கும். குரு உங்கள் ஜென்ம ராசியை 7 ஆண்டுகளுக்கு பிறகு பார்வை இடுகிறார். சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை என்றாலும், குரு உங்களுக்கு சாதகமான இடத்தில் சஞ்சரிப்பதால் அர்தஷ்டம சனியின் தாக்கம் குறைவாகவே உணரப்படும். உங்கள் உடல்நலம், குடும்பம், உத்தியோகம், நிதி மற்றும் முதலீடுகள் போன்ற விடயங்களில் நல்ல மாற்றங்களை காண்பீர்கள். ஏப்ரல் 14, 2022 சுப காரியங்கள் நிகழ்த்த ஏற்ற நேரமாக உள்ளது. மேலும் சுப காரியங்கள் நிகழ்த்துவதில் வெற்றியும் பெறுவீர்கள்.
ஆனால் உங்கள் அதிர்ஷ்டங்கள் ஏப்ரல் 14, 2022 வரை மட்டுமே இருக்கும். உங்களுக்கு இந்த காலகட்டத்தில் கிடைக்கும் வாய்ப்பை பற்றிக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் செட்டிலாகிவிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். குரு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆனதும், அர்தஷ்டம சனியின் தாக்கம் கடுமையாகலாம். செப்டம்பர் 2022 வரை நீங்கள் கலவையானப் பலன்களைப் பெறுவீர்கள். இந்த ஆண்டின் இறுதி காலாண்டு – அக்டோபர் முதல் டிசம்பர் 2022 வரை உங்களுக்கு மோசமான காலகட்டமாக இருக்கலாம்.
இந்த கடைசி பகுதியில் விடயங்கள் உங்கள் கட்டுபாட்டை மீறிப் போகலாம், நீங்கள் செய்யும் முதலீடுகளில் பெரிய அளவில் இழப்புகள் ஏற்படலாம். உங்கள் உடல் நலமும் பாதிக்கப்படலாம். மேலும் உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், அக்டோபர் /நவம்பர் 2022 வாக்கில் நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் வாய்ப்பும் உள்ளது. ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்க முயற்சி செய்ய வேண்டும். உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு அக்டோபர் முதல் டிசம்பர் 2022 வரையிலான காலகட்டத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic