2022 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

ஏப்ரல் 14, 2022 முதல் ஜூலை 28, 2022 வரை எதிர்பாராத பின்னடைவுகள் (40 / 100)


குரு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிற்கு ஏப்ரல் 14, 2022 அன்று பெயர்ச்சி ஆகிறார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத பின்னடைவுகளும் தடைகளும் இந்த பாகத்தில் ஏற்படலாம். ராகு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டிலும் கேது ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பதும் சிறப்பாக இல்லை.
அர்தஷ்டம சனி நடப்பதால் உங்கள் உடல் நலமும் குறிப்பாக ஜூன் 2022 முதல் வாரம் வாக்கில் பாதிக்கப்படலாம். உங்கள் பெற்றோர்களின் உடல் நலம் பாதிக்கப்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். முடிந்த வரை சுப காரியங்கள் நிகழ்த்துவதை தவிர்த்துவிடுவது நல்லது. ராகு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் உறவை பாதிப்பார். குழந்தை பேறுக்கு திட்டமிட இது ஏற்ற நேரம் இல்லை.


அலுவலகத்தில் அரசியல் அதிகமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் வேலையை முடிக்க நீங்கள் நீண்ட நேரம் வேலை பார்க்க வேண்டியதிருக்கலாம். உங்கள் உத்தியோகத்தில் உங்களால் அடுத்த நிலைக்கு முன்னேற முடியாமல் போகலாம். உங்கள் உத்தியோகத்தை இப்போது மாற்றுவது நல்ல யோசனையாக இருக்காது. அலுவலகத்தில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால், இதனால் நீங்கள் உங்கள் முக்கியத்துவத்தை இழக்க நேரலாம். கேது உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்களுக்கு மன உளைச்சலைத் தரவார். பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரும் அளவு இழப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் பங்குச்சந்தை வர்த்தகத்தை முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது.
முடந்த வரை பயணம் செய்வதை தவிர்த்துவிடுவது நல்லது. விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் பெரும் விடயங்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தேக்கம் அடையலாம். உங்களுக்கு ஏற்படும் தோல்விகள் மற்றும் ஏமாற்றங்களால் நீங்கள் வருத்தம் அடைய நேரலாம்.



Prev Topic

Next Topic