![]() | 2022 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | மூன்றாம் பாகம் |
ஜூலை 28, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை நல்ல நிவாரணம் (60 / 100)
இது ஒரு சிறப்பான நேரமாக இருக்கும் என்று சொல்ல முடியாது, ஆனாலும் நீங்கள் கடந்த பாகத்தை விட இந்த பாகத்தில் நல்ல மாற்றங்களை காண்பீர்கள். குரு மற்றும் சனி பகவான் வக்கிர கதி அடைந்த நிலையில் இருப்பதால், உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். நீங்கள் இந்த பாகத்தில் உங்கள் உடல்நலத்தை மீண்டும் பெறுவீர்கள்.
உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் குறையும். உங்களுக்கும் இருக்கும் பிரச்சனைகளை அதிக முயற்சிகளோடு நீங்கள் சரி செய்து விடுவீர்கள். உணல் மகா தசை சாதகமாக இருந்தால், உங்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ உங்கள் உறவுகளை விட்டு பிரிந்து இருந்தால், மீண்டும் அவர்களுடன் ஒன்றாக சேர்ந்து உங்கள் வாழ்க்கையைத் தொடர உங்கள் பிறந்த சாதக பலனை பார்க்க வேண்டும்.
உங்கள் மீது ஏதேனும் தவறான குற்றச்சாட்டு இருந்தால், போதிய சாட்சியங்கள் தந்து உங்கள் தரப்பு உண்மைகளை நீங்கள் நிரூபிக்க முயற்சிப்பீர்கள். உங்கள் வேலை பளு சற்று குறையும். ஆனால் உங்களால் இப்போது வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. நிலுவையில் இருக்கும் விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் சார்ந்த விடயங்களில் சற்று முன்னேற்றம் ஏற்படும்.
உங்கள் கடனை நிதி மறுபரிசீலனை செய்து உங்கள் மாதாந்திர தவணையை குறைக்கும் முயற்சியில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். நிதி சார்ந்த விடயங்கள் உங்கள் கட்டுபாட்டிற்குள் இருக்கும், உங்களால் அதனை சமாளித்துவிட முடியும். நீங்கள் பங்குச்சந்தை முதலீடுகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. மருத்துவ காப்பீடு, மே 2023 வரை உள்ள சொத்துகள் மீதான காப்பீடு, வாகன காப்பீடு மற்றும் பயணம் சார்ந்த காப்பீடுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
Prev Topic
Next Topic