2022 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

வேலை / உத்தியோகம்


சனி பகவான் உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டில் இந்த 2022 ஆம் ஆண்டு சஞ்சரிப்பார். இது அர்தஷ்டம சனியாகும். இதனால் பொதுவாக உத்தியோகம் பாதிக்கபப்டலாம். ஆனால் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்கள் குரு மற்றும் ராகு நல்ல நிலையில் சஞ்சரிப்பதன் பலத்தால் நீங்கள் சிறப்பான பலனைப் பெறுவீர்கள். சற்று வேலை பளு இருக்கலாம். ஆனாலும் அதனை நீங்கள் சமாளித்து சரியான நேரத்தில் உங்கள் ப்ரோஜெக்ட்டை முடிப்பீர்கள். உங்களுக்கு வெகுமதிகள் கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மேலும் நல்ல சம்பள உயர்வோடு உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும்.


ஏப்ரல் 2022 வரை வெளிநாட்டிற்கு குடிபெயர ஏற்ற காலமாக உள்ளது. நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம், உள்நாட்டிலேயே இடமாற்றம், குடியேற்றப் பலன்கள் போன்ற பலன்களை நீங்கள் எளிதாக உங்கள் நிறுவனத்தில் இருந்து பெறுவீர்கள். ஆனால் இந்த ஆண்டின் இரண்டாம் பாதி உங்களுக்கு சிறப்பாக இல்லை. மே 2022 முதல் உங்கள் உத்தியோகத்தில் வளர்ச்சி தாமதமாகவே இருக்கும். அலுவலகத்தில் நடக்கும் அரசியலை சமாளிப்பதில் உங்களுக்கு கடினமான நேரம் நிலவலாம்.


அக்டோபர் 2022 ஐ அடைந்ததும், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அர்தஷ்டம சனியின் கடுமையான தாக்கத்தை நீங்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் 2022 வாக்கில் உணருவீர்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் உத்தியோகத்தை இழக்கும் வாய்ப்பும் உள்ளது. மேலும் மோசமான சூழலில், உங்களுக்கு சட்ட பிரச்சனைகளும், பாகுபாடுகளும் மற்ற பிற பிரச்சனைகளும் ஏற்படலாம். நீங்கள் மேலாளராக இருந்தால், 2022 இன் இறுதி காலாண்டில் மேலும் கவனமாக இருக்க வேண்டும்.

Prev Topic

Next Topic