![]() | 2022 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
சனி பகவான் உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது தொழில்முனைவோர்களுக்கு ஒரு சிறப்பான செய்தியாக உள்ளது. உங்கள் மறைமுக எதிரிகள் பலம் இழந்து உங்கள் முன் சரணடைவார்கள். உங்கள் போட்டியலார்களால் உங்களுடைய புதுமையான யோசனைகள் மற்றும் திட்டங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் போகலாம். ராகு உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை பலன் மடங்கு அதிகரிப்பார். குரு உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவதால் உங்களுக்கு ஆடம்பர செலவுகள் அதிகரிக்கலாம்.
உங்கள் வளர்ச்சி தொடர்ச்சியாக இருக்கும். நீங்கள் இந்த காலகட்டத்தில் எதை செய்தாலும் அதில் பெரும் அளவு வெற்றியைப் பெறுவீர்கள். சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட், இன்சூரன்ஸ் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் தங்களுக்கு கிடைக்கும் வெகுமதிகளால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மேலும் உங்கள் வணிகத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டு ஒரே இரவில் நீங்கள் பணக்காரராகும் வாய்ப்பும் உள்ளது. ஏப்ரல் 2022 வரை நீங்கள் இந்த அதிர்ஷ்டங்களைப் பெறுவீர்கள்.
மே 2022 முதல் நவம்பர் 2022 வரை உங்கள் வளர்ச்சியில் வேகம் குறையும், மேலும் பின்னடைவுகளும் ஏற்படலாம். விடயங்கள் எந்த முன்னேற்றமும் இன்றி உங்கள் மறைமுக எதிரிகள் மற்றும் போட்டியாளர்கள் செய்யும் சதியால் தேக்கம் அடையலாம். நீங்கள் டிசம்பர் 2022 ஐ அடைந்ததும் விடயங்கள் முற்றிலுமாக உங்களுக்கு எதிராக மாறலாம். நீங்கள் கவனமாக இல்லை என்றால், இந்த 2022 ஆண்டின் முதல் 4 மாதங்களில் உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டங்களை நீங்கள் இழக்க நேரலாம். மேலும் டிசம்பர் 2022 முதல் ஏப்ரல் 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் அதிக இழப்பையும் உங்கள் வணிகத்தில் எதிர்கொள்ள நேரலாம்.
Prev Topic
Next Topic