2022 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

நிதி / பணம்



சனி பகவான் உங்கள ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்திலும் ராகு உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து இந்த 2022 புத்தாண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு பண மழையைப் பொழிவார்கள். உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனைகளில் இருந்து நீங்கள் முற்றிலுமாக வெளிவந்து விடுவீர்கள். உங்கள் கடனை நிதி மறுபரிசீலனைச் செய்ய இது சிறப்பான நேரமாகு இருக்கும். உங்கள் கிரெடிட் மதிப்புகள் அதிகரிக்கும். உங்கள் வங்கிக் கடன்கள் குறைந்த வட்டி விகிதத்திற்கு எந்த சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். பண வரத்து வெளிநாடுகளில் இருந்தும் வரும். உங்கள் செலவுகள் குறையும். புது வீடு மற்றும் கார் வாங்க ஏப்ரல் 2022 க்கு முன் வரை சிறப்பான நேரமாக உள்ளது.



ஆனால் மே 2022 முதல் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். பணம் சேமிப்பது என்பது உங்களுக்கு கடினமான ஒன்றாக இருக்கலாம். மாறாக செலவுகள் உங்கள் சேமிப்பை கரைத்து விடும் வகையில் அதிகரிக்கலாம். நவம்பர் 2022 ஐ அடைந்ததும் நீங்கள் உங்கள் தேவைக்காக பணம் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு மே 2022 முதல் வங்கியில் பணம் கடன் வாங்க சூரிட்டி தருவதை தவிர்த்துவிடுங்கள். இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் முதலீடுகள் செய்வதை தவிர்த்துவிடுங்கள். நீங்கள் கவனமாக இல்லை என்றால், பண விடயங்களில் நீங்கள் டிசம்பர் 2022 வாக்கில் ஏமாற்றப்படலாம். இந்த ஆண்டின் இரண்டாம் பாதி உங்களுக்கு சிறப்பாக இல்லை என்பதால் ஏப்ரல் 2022 க்கு முன் உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாகி விடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.



Prev Topic

Next Topic