![]() | 2022 புத்தாண்டு உடல்நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | உடல்நலம் |
உடல்நலம்
இந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருக்கும் உடல் உபாதைகள் குணமாகும். எந்த விதமான நாள்பட்ட உடல்நல பிரச்சனைகளாக இருந்தாலும், அது சனி பகவான், ராகு மற்றும் குரு நல்ல நிலையில் சஞ்சரிபப்தால் சரியான மருந்து கிடைத்து குணப்படுத்தப்படும். உங்களுக்கு சரியான மருந்து கிடைப்பதால் நீங்கள் விரைவில் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவீர்கள். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். மேலும் உங்களுக்கு நல்ல தூக்கமும் கிடைக்கும். நீங்கள் தேவைப்பட்டால் அறுவைசிகிச்சையும் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு ஏப்ரல் 2022 வரை மட்டுமே இருக்கும்.
குரு உங்கள் ஜென்ம ராசிக்கு பெயர்ச்சி ஆவது உங்களுக்கு நல்ல செய்தி அல்ல. இருப்பினும், சனி பகவானிடம் இருந்து நீங்கள் தொடர்ந்து நல்ல அதிர்ஷ்டங்களைப் பெறுவீர்கள். ஆனால் ராகு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டிற்கு பெயர்வதும் சாதகமற்ற விடயமாக உள்ளது. மே 2022 க்கு பிறகு நீங்கள் அறுவைசிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றால், அதனை முடிந்த வரை தவிர்த்துவிடுவது நல்லது. உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். மேலும் டிசம்பர் 2022 ஐ அடைந்ததும் உங்களுக்கு மன உளைச்சலும் மனக் கவலையும் ஏற்படலாம். தினமும் காலையில் ஆதித்ய ஹிருதயம் மற்றும் ஹனுமான் சாலிசா கேட்பதால் நீங்கள் அதிக பலத்தைப் பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic