2022 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

வழக்கு



சனி பகவான் உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டிலும் ராகு 3 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் நீண்ட காலமாக நடைபெறும் நீதிமன்ற வழக்கில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். உங்களால் சரியான சாட்சியங்களைத் தந்து உங்கள் தரப்பு உண்மைகளை வெளி கொண்டு வர முடியும். உங்களுக்கு நல்ல வழக்கறிஞர் கிடைப்பார். அவர் சரியான விதத்தில் வழக்கை எடுத்துச் செல்வார். மார்ச் 2022 க்கு முன் நீங்கள் கிரிமினல் வழக்கில் இருந்தும் வெளியில் வந்துவிடுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் பெரும் முயற்சிகளிலும் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். சொத்துக்களை உங்கள் பெயரில் பதிவு செய்யவோ அல்லது மாற்றவோ இது நல்ல நேரம். பெருமாளை வணங்கி உங்கள் நிதி நிலையில் வெற்றி பெறுங்கள்.



மே 2022 ஐ அடைந்ததும் ஜென்ம குருவால் விடயங்கள் சிறப்பாக நடக்காமல் போகலாம். மே அல்லது ஜூன் 2022 வாக்கில் உங்களுக்கு பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் போகலாம். ஏனென்றால், சனி பகவான் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பார். ஆனால் டிசம்பர் 2022 ஐ நீங்கள் அடைந்ததும் விடயங்கள் உங்கள் கட்டுபாட்டை மீறிப் போகலாம். உங்கள் நற்பெயரையும் செல்வாக்கையும் பாதிக்கும் வகையில் டிசம்பர் 2022 முதல் ஏப்ரல் 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு புது வழக்குகள் ஏற்படத் தொடங்கலாம்.



Prev Topic

Next Topic