2022 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

காதல்



சனி பகவான் உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டிலும், ராகு உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டிலும் மற்றும் குரு உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் காதல் வாழ்க்கையில் உங்களுக்கு பொற்காலத்தை உண்டாக்குவார்கள். நீங்கள் காதலிப்பீர்கள். உங்கள் நீண்ட கால கனவுகள் நினவாகும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீண்ட காலமாக குழந்தை பேறுக்காக காத்திருந்த தம்பதியினர் அந்த பாக்கியத்தைப் பெறுவார்கள். மேலும் இயற்கையாகவோ அல்லது மருத்துவ சிகிச்சை மூலமாகவோ நீங்கள் குழந்தை பேறுக்கு திட்டமிடலாம். உங்கள் காதல் திருமணத்திற்கு உங்கள் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். ஏப்ரல் 14, 2022 க்கு முன் திருமணம் செய்து கொள்ள நேரம் சிறப்பாக உள்ளது.



மே 2022 முதல் நவம்பர் 2022 வரை கிரகங்கள் வக்கிர கதி அடைந்தும் அதி சரமாய் சஞ்சரித்தும் இருப்பதால் நீங்கள் கலவையானப் பலன்களைப் பெறுவீர்கள். நவம்பர் 24, 2022 முதல் நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள். ஜென்ம குருவின் தாக்கம் அதிகம் உணரப்படும். நீங்கள் காதலிப்பவருடன் உங்களுக்கு கருத்துவேறுபாடும் சண்டைகளும் ஏறப்டலாம். நீங்கள் மிகவும் பொறுமையாக இருந்து உங்கள் உறவை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஏப்ரல் 2023 வரை நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே நீங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பிராவும் வாய்ப்பு உள்ளது.



Prev Topic

Next Topic