![]() | 2022 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2022 புத்தாண்டு பலன்கள் - மீன ராசி - (Meena Rasi). சனி பகவான் உங்கள் ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் இந்த 2022 ஆம் ஆண்டு சஞ்சரிப்பார். உங்களது நீண்ட கால இலக்குகளை அடைவதில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். குரு உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சுப விரைய செலவுகளை உண்டாக்குவார். சுப காரியங்கள் நிகழ்த்துவதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெரும்.
ஆனால் ஏப்ரல் 14, 2022 முதல் உங்களுக்கு ஜென்ம குரு தொடங்க உள்ளதால் உங்களுக்கு முன்னேற்றத்தில் வேகம் குறையும். நவம்பர் 2022 வரை சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் நீங்கள் கலவையானப் பலன்களைப் பெறுவீர்கள். டிசம்பர் 2022 ஐ அடைந்ததும் நீங்கள் கடுமையான சோதனை காலத்தில் இருப்பீர்கள். இது இந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டங்களை அப்படியே தலைகீழாக மாற்றிவிடக்கூடும்.
இந்த ஆண்டின் முதல் பாதியிலேயே முக்கிய முடிவுகள் எடுத்து சுப காரியங்களை நிகழ்த்திவிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் பலமாக இருக்க வேண்டும். சுதர்சன மகா மந்திரம் கேட்டு மறைமுக எதிரிகள் மற்றும் கன் திரிஷ்டியில் இருந்து விடுபட முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic