![]() | 2022 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | இரண்டாம் பாகம் |
ஏப்ரல் 14, 2022 முதல் ஜூலை 28, 2022 வரை மிதமான பின்னடைவுகள் (40 / 100)
கடந்த பாகத்தில் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மைல்கல்லை அடைந்திருப்பீர்கள். தற்போது குரு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கின்றார். சனி பகவான் உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் அதி சரமாய் சஞ்சரிக்கின்றார்.. ராகு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு பின்னடைவுகளை ஏற்படுத்துவார். மேலும் கேது உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களால் எந்த பலனையும் இந்த பாகத்தில் எதிர்பார்க்க முடியாது.
இந்த் பாகத்தில் விடயங்கள் உங்களுக்கு எதிராக திரும்பும். நீங்கள் எதை செய்தாலும் அதில் தாமதங்களையும் பின்னடைவுகளையும் சந்திப்பீர்கள். உங்கள் மீது பொறாமை மற்றும் கண் திர்ஷ்டி அதிகமாக இருக்கும். உங்கள் மறைமுக எதிரிகள் இந்த பாகத்தில் அதிகம் பலம் பெறுவார்கள். குடும்பத்தில் நடக்கும் அரசியல் உங்கள் நிம்மதியை எடுத்துவிடக் கூடும். உங்கள் குழந்தைகள் உங்களிடம் புதிய தேவைகளை முன் வைப்பார்கள். நீங்கள் காதலித்துக் கொண்டிருந்தாள், இந்த காலகட்டத்தில் நீங்கள் பாதுகாப்பு இல்லாதது போல உணருவீர்கள்.
உங்கள் உத்தியோக வாழ்க்கை உங்கள் அலுவலகத்தில் நடக்கும் அரசியலால் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். உயர் நிலையில் இருக்கும் நிர்வாகத்தினர் உங்கள் செயல்திறனைக் கண்டு மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். சனி பகவானின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால் அலுவலகத்தில் விடயங்கள் உங்களுக்கு எதிராக நடப்பதை நீங்கள் நன்கு உணருவீர்கள். தொழில்முனைவோர்கள் தங்களுக்கு கிடைத்த ப்ரோஜெக்ட்டுகளை இழக்க நேரலாம். இதனால் அவர்களுக்கு இழப்புகள் ஏற்படலாம். மேலும் தங்கள் வாடிக்கையாளர் அல்லது பங்குதாரர்களிடம் இருந்து சட்ட வழக்கு ஏற்படலாம்.
பயணம் உங்களுக்கு எதிர்பார்த்த பலனைத் தராமல் போகலாம்., இதனால் உங்களுக்கு செலவுகளும் அதிகரிக்கலாம். உங்கள் விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் ஒப்புதல் பெறாமல் போகலாம். நீங்கள் உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து உங்கள் தாய் நாட்டிற்கு திரும்பும் சூழல் ஏற்படலாம். நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் முதலீடுகளை முற்றிலுமாக தவிர்த்துவிடுவது நல்லது. முதலீடு செய்யும் சொத்துக்களை வாங்குவதை தவிர்த்துவிடுவது நல்லது.
Prev Topic
Next Topic