![]() | 2022 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
இந்த 2022 ஆம் ஆண்டிங் தொடக்கத்தில் உங்கள் உத்தியோக வளர்ச்சி சார்ந்த விடயங்கள் சிறப்பாக உள்ளது. பெப்ரவரி 2022 வாக்கில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்தால், அதில் ஆச்சரியபபட ஒன்றும் இல்லை. நீங்கள் புது வேலை வாய்ப்புக்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள், நல்ல சம்பளத்தோடு உங்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பும் கிடைக்கும். உங்களுக்கு நல்ல பதவியும் கிடைக்கும். மேலும் நீங்கள் விரும்பிய இடத்திலேயே உங்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாட்டிற்கு பயணம் செய்யும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும்.
ஏப்ரல் 2022 வாக்கில் நீங்கள் உங்கள் உத்தியோக வளர்ச்சியில் மைல்கல்லையும் அடைவீர்கள். நீங்கள் எதை செய்தாலும் அதில் நல்ல வெற்றியையும் சிறப்பான வளர்ச்சியையும் பெறுவீர்கள். உங்கள் வளர்ச்சி மற்றும் வெற்றியைக் கண்டு உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்கள் மீது பொறாமைப் படுவார்கள். மே 2022 முதல் வாரம் வாக்கில் உங்களுக்கு பிரச்சனைகள் வரத் தொடங்கும். நவம்பர் 2022 வரை உங்கள் அலுவலகத்தில் நடக்கும் அரசியலை நீங்கள் சமாளித்துவிடுவீர்கள்.
ஆனால் டிசம்பர் 2022 முதல் உங்கள் மறைமுக எதிரிகள் அதிக பலம் பெறத் தொடங்குவார்கள். உங்கள் அலுவலகத்தில் நடக்கும் விடயங்களை சமாளிக்க முடியாமல் கடினமான சூழல் ஏற்படலாம். உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்களுடன் உங்களுக்கு கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படலாம். உங்களுக்கு வேலையில் ஆர்வம் இல்லாமல் இருக்கும். நீங்கள் பொறுமையாக இருந்து உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு மே 2023 வரை உங்களுக்கு தொடரும் சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic