![]() | 2022 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | கல்வி |
கல்வி
மாணவர்களுக்கு இது சவாலான நேரமாக இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் அதிக தனிமையை உணருவீர்கள் மேலும் உங்கள் மனம் குழப்பமான நிலையில் இருக்கும். உங்கள் நண்பர்களுடன் உங்களுக்கு கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். நீங்கள் பரிச்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும். ஏப்ரல் 2022 வரை கல்லூரியில் சேர்கை கிடைக்கும் விடயங்களில் உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படலாம். ஒரு நல்ல ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று இந்த சோதனை காலத்தை நீங்கள் கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
மே 2022 முதல் குரு உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆனதும் நீங்கள் ஓரளவு முன்னேற்றத்தைப் பெறத் தொடங்குவீர்கள். ஆனால் உங்கள் கல்வி சம்பத்தப்பட்ட விடயங்களில் நீங்கள் கிடைக்கும் கல்லூரியில் சேர்ந்துவிட உங்களை தயார்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். விளையாட்டில் சுமாராகவே செயல்படுவீர்கள். உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கும் நல்ல நண்பர்களைப் பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic