2022 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

ஜனவரி 01, 2022 முதல் ஏப்ரல் 14, 2022 வரை குடும்பத்தில் பிரச்சனைகள் (40 / 100)



ஏழரை சனி காலத்தின் இறுதி பாகத்தில் நீங்கள் இருகின்றீர்கள். சனி பகவான் ஜனவரி 2023 வாக்கில் அடுத்த இடத்திற்கு பெயர்ச்சி ஆன பின்னரே ஏழரை சனி முடிவடையும். எனவே இந்த 2022 ஆண்டு நீங்கள் பாதகமான தாக்கங்களை சந்திக்க நேரலாம். குரு உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் குடும்ப சூழலில் உங்களுக்கு கசப்பான அனுபவங்களை உண்டாக்குவர்.


உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவு பாதிக்கப்படலாம். நீங்கள் அவர்களின் தேவைகளை புரிந்து கொள்ள அவர்களுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். குடும்பத்தில் அதிகரிக்கும் பிரச்சனைகள் உங்கள் மன நிம்மதியை எடுத்தது விடக்கூடும். திருமணம் ஆனவர்கள் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பார்கள். குழந்தை பேருக்குத் திட்டமிட இது ஏற்ற நேரம் இல்லை. உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்களுக்கு சட்ட பிரச்சனைகளும் ஏற்படலாம்.

வேலை பளு மற்றும் பதற்றம் அதிகரிக்கும். அலுவலகத்தில் நடக்கும் அரசியலால் நீங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். ஆனால் உங்கள் உத்தியோகத்தை நீங்கள் பாதுகாப்பாக தக்கவைத்துக் கொள்வீர்கள். புது வேலை வாய்ப்பு கிடைக்கும் விடயங்களில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். தொழில்முனைவோர்கள் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். பண வரத்து மிக மோசமாக பாதிக்கப்படலாம். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெறாமல் போகலாம். நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பங்குச்சந்தை வர்த்தகத்தை விட்டு விலகி இருப்பது நல்லது.



Prev Topic

Next Topic