2022 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

காதல்


நீங்கள் காதலித்துக் கொண்டிருந்தாள், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் இருவருக்கும் இடையே மூன்றாவது நபர் வர நேர்ந்தால், விடயங்கள் மிகவும் மோசமாகலாம். உங்களுக்கு எதிரான சதி மற்றும் துரோகங்களால் நீங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். நீங்கள் பிரிந்து விடலாம் என்றும் நினைப்பீர்கள். மேலும், தவறான ஒரு நபரை நோக்கி நீங்கள் ஈர்க்கவும் படலாம். இதனால் ஏப்ரல் 2022 க்கு முன் அவரால் நீங்கள் ஏமாற்றவும் படலாம்.


பெப்ரவரி மற்றும் மார்ச் 2022 வாக்கில் உங்களுக்கு மன உளைச்சல் மிகவும் அதிகமாக இருக்கும். நீங்கள் நல்ல நண்பர்களின் உதவியோடு இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும். திருமணம் ஆனா தம்பதியினர் மகிழ்ச்சி குறைந்து காணப்படுவார்கள். குழந்தை பேறு பெரும் விடயத்தில் உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படலாம். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், இந்த ஆண்டின் முதல் பாதி வரை திருமண முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பதே நல்லது.


மே / ஜூன் 2022 ஐ அடைந்ததும், விடயங்கள் பெரும் அளவு முன்னேற்றம் பெரும். நீங்கள் மன உளைச்சலில் இருந்து வெளியில் வருவீர்கள். நீங்கள் காதலிப்பவரை விட்டு பிரிந்து இருந்தால், உங்கள் மனம் பலம் பெற்று நடந்ததை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தைப் பெறுவீர்கள். உங்கள் மனம் நிம்மதியாக இருக்கும். பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்தில் உங்களுக்கு ஆர்வம் உண்டாகும். முடிந்தால் மே 2023 வரை காத்திருந்து பின்னர் நீங்கள் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கலாம். குழந்தை பேறு பெரும் பாக்கியம் தற்போது திருமணம் ஆன தம்பதியினருக்கு சிறப்பாக இல்லை.

Prev Topic

Next Topic