![]() | 2022 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2022 புத்தாண்டு பலன்கள் – Dhanushu Rasi – தனுசு ராசி. சனி பகவான் உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் இந்த 2022 ஆம் ஆண்ட சஞ்சரித்து உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் அதிக அழுத்தம் நிறைந்த சூழலை உண்டாக்குவார். ஏப்ரல் 14, 2022 வரை ராகுவிடம் இருந்தும் அதன் பிறகு கேதுவிடம் இருந்தும் உங்கள் இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். குரு உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டிற்கு ஏப்ரல் 14, 2022 அன்று பெயரும் வரை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
குரு உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உத்தியோகம், நிதி நிலை மற்றும் உறவுகள் சார்ந்த விடயங்களில் உங்களுக்கு பாதகமான பலன்களைத் தருவார். இந்த 2022 ஆம் ஆண்டு உங்கள் வாழ்க்கையின் பல விடயங்களில் அதிக சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும். ஏப்ரல் 14, 2022 வரை சுப காரியங்கள் நிகழ்த்துவதை தவிர்த்துவிடுவது நல்லது. பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிக பிரச்சனைகள், சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் மற்றும் ஏமாற்றங்கள் என்று பல சிக்கல்கள் உங்களுக்கு ஏற்படலாம். சட்ட பிரச்சனைகளும் உங்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஏப்ரல் 14, 2022 முதல் டிசம்பர் 31, 2022 வரை நீங்கள் கலவையானப் பலன்களை சந்திப்பீர்கள். உங்கள் உறவுகள் சார்ந்த விடயங்களில் சற்று முன்னேற்றங்களை காண்பீர்கள். உங்கள் வேலை பளு சுமாராக இருக்கும். நிதி நிலை எந்த நிவாரணமும் இன்றி பாதிக்கப்படலாம். குறிப்ப்பிடத்தக்க அளவு ஏதேனும் வளர்ச்சியை நீங்கள் எதிர்பார்த்தால் அது கோசார கிரகங்களின் அடிப்படையில் தற்போது நடப்பது சந்தேகமே. ஆனால் அக்டோபர் 2022 க்கு பிறகு உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.
Prev Topic
Next Topic