2022 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

ஏப்ரல் 14, 2022 முதல் ஜூலை 28, 2022 வரை சிறப்பான நிவாரணம் (70 / 100)



குரு உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகி உங்கள் உறவுகளுடன் இருக்கும் பிரச்சனைகளை குறைக்க உதவுவார். சனி பகவான் உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டிற்கு அதி சரமாய் பெயர்ச்சி ஆவதால் சிறப்பான நிவாரணத்தைப் பெறுவீர்கள். கேது உங்கள் ராசியின் லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகி நல்ல அதிர்ஷ்டங்களைத் தருவார். ராகு உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு மனக் கவலை மற்றும் பதற்றத்தை உண்டாக்குவார்.


கடந்த பாகத்தை விட இந்த பாகத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நாள்பட்ட உடல்நல பிரச்சனைகளில் இருந்து குரு மற்றும் சனி பகவானின் பலத்தால் நீங்கள் விரைவாக குணமடைவீர்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்கு உங்களுக்கு நல்ல தீர்வுகள் கிடைக்கும். சுப காரியங்கள் நிகழ்த்த இது நல்ல நேரம். குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குழந்தை பேறுக்கு திட்டமிட இது ஏற்ற நேரம்.

அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரொஜெக்டில் வேலை பார்க்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்கள் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சுயதொழில் புரிவோர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் நல்ல புதுமையான யோசனைகளை முன் கொண்டு வருவார்கள், இதனால் அவர்கள் பெரும் அளவு வெற்றியைப் பெறுவார்கள். இது கடந்த பாகத்தில் நீங்கள் செய்த கடின உழைப்பிற்கு நல்ல வெகுமதிகள் கிடைக்கும் காலமாக இருக்கும். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும்.



Prev Topic

Next Topic