2022 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

ஜூலை 28, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை கலவையானப் பலன்கள் (60 / 100)



குரு மற்றும் சனி பகவான் இந்த காலகட்டத்தில் வக்கிரகதி அடையும் நிலையில் இருப்பார்கள். எந்த திசையிலும் நகராமல் விடயங்கள் தேக்கம் அடையலாம். கடந்த பாகத்தை விட உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற சற்று தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் பெற்றோர்களின் உடல்நலம் மற்றும் குடும்பத்தினர்களின் உடல் நலம் பாதிக்கப்படலாம். மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம்.


முடிந்த வரை சுப காரியங்களை நிகழ்த்துவதை தவிர்த்துவிடுவது நல்லது. குழந்தை பேறுக்கு திட்டமிட இது ஏற்ற நேரம் இல்லை. உங்கள் குடும்பத்தினர்களுடன் இருக்கும் உறவு சுமாராகவே இருக்கும். வேலை பளு மற்றும் பதற்றம் மிதமாக இருக்கும். நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட ப்ரோஜெக்ட்டை முடிக்க அலுவலகத்தில் அதிக நேரம் செலவு செய்ய வேண்டியத் தேவை ஏற்படலாம். தொழில்முனைவோர்கள் கலவையானப் பலனைப் பெறுவார்கள்.

உங்கள் வருமானம் சுமாராக இருக்கும். ஆனால் செலவுகள் இந்த பாகத்தில் அதிகரிக்கும். உங்கள் வங்கிக் கடன் அதிக வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் பெரும். முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்து விடுங்கள். உங்கள் விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தேக்க நிலையைப் பெறலாம். பங்குச்சந்தை வர்த்தகம் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு லாபம் தருவதாக இல்லாமல் போகலாம்.



Prev Topic

Next Topic