2022 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்


ஏப்ரல் 14, 2022 வரை உங்களுக்கு நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தை முற்றிலுமாக தவிர்த்துவிடுவது நல்லது. முதலீடுகளில் நீங்கள் பெரும் அளவு பணத்தை இழக்க நேரலாம். நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீடுகளை விட்டு விலகி இருப்பது நல்லது. புது வீடு வாங்க இது ஏற்ற நேரம் இல்லை. பாதுகாப்பான முதலீடுகளை செய்ய முயற்சிப்பது நல்லது.
குரு உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டிற்கு ஏப்ரல் 14, 2022 அன்று பெயர்ச்சி ஆனதும், நீங்கள் நல்ல பலத்தைப் பெறத் தொடங்குவீர்கள். இருப்பினும், உங்கள் நிவாரணத்தின் வேகம் உங்கள் பிறந்த சாதகத்தை பொறுத்தே இருக்கும். ஏனென்றால், ராகு உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டிலும் சனி பகவான் 2 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சாதகமான சஞ்சாரமாக இருக்காது. நீங்கள் பங்குசந்தையில் நீண்ட கால முதலீடுகளை செய்யலாம். ஆனால் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் நல்ல அதிர்ஷ்டங்களைத் தராமல் போகலாம்.


நாடுகளுக்கு இடையே நீங்கள் பண பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால், அதாவது ஒரு நாட்டில் சொத்துக்களை விற்று வேறு ஒரு நாட்டிற்கு பணத்தை பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால், அதிக சவால்களை சந்திக்க நேரலாம். நீங்கள் பண விடயத்தில் ஏமாற்றப்படவில்லை என்றாலும், பரிமாற்ற செயல்முறையின் போது ஏமாற்றப்படலாம். விஷ்ணு சஹாசார நாமம் மற்றும் சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள்.


Prev Topic

Next Topic