2022 புத்தாண்டு பயணம், வெளிநாட்டுப் பயணம், குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

பயணம், வெளிநாட்டுப் பயணம், குடியேற்றம்



ஏப்ரல் 2022 வரை பயணம் உங்களுக்கு பெரும் அளவு பிரச்சனையைத் தரலாம். உங்கள் சமூக வாழ்க்கை போதிய நண்பர்கள் இல்லாததால் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். எந்த ஆதரவும் இல்லாமல் நீங்கள் அதிக தனிமையை உணர நேரலாம். உங்கள் மனக் கவலை மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் இருப்பதே நல்ல யோசனையாக இருக்கும். இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பயண சீட்டு மற்றும் தாங்கும் விடுதி போன்ற விடயங்களில் உங்களுக்கு முன் பதிவு செய்ய நல்ல சலுகைகள் கிடைக்காமல் போகலாம். நீங்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால், உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து நீங்கள் தாய்நாடு திரும்பும் சூழல் ஏற்படலாம்.



உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் மே 2022 முதல் குறையும். பயணத்தின் போது அதிக செலவுகள் இருந்தாலும் பயணத்தால் சற்று அதிர்ஷ்டத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். நிலுவையில் இருக்கும் விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் ஒப்புதல் பெரும். சுற்றுலாவின் போது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மே 2022 க்கு மேல் கார் அல்லது வீடு போன்றவற்றை நீங்கள் வாங்க முயற்சித்தால் தவறான ஆவணங்களால் நீங்கள் ஏமாற்றப்படலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.



Prev Topic

Next Topic