2022 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

வேலை / உத்தியோகம்



உத்தியோகத்தில் இருப்பவர்கள், இந்த 2022 ஆண்டின் தொடக்கத்தில் அதிக சவால்களை சந்திப்பார்கள். உங்களுக்கு எதிரான சதி மற்றும் அரசியலால் நீங்கள் அலுவலகத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். நீங்கள் மிகவும் நம்பியவரே உங்களுக்கு எதிராக இப்போது செயல்படலாம். உங்களுக்கு நடக்கும் துரோகங்களை ஜீரணிப்பது உங்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கலாம். யாருடனும் அலுவலகத்தில் மனதளவில் மிகவும் நெருக்கமாக பழகுவதை தவிர்த்துவிடுவது நல்லது. நீங்கள் உங்கள் மனதை கட்டுப்படுத்தி சற்று விலகி இருக்கவில்லை என்றால், ஏப்ரல் 2022 க்கு முன் நீங்களாகவே உங்கள் உத்தியோகத்தை ராஜினாமா செய்து விட்டு அலுவலகத்தை விடு வெளியேறிவிடும் சூழ்நிலை ஏற்படலாம்.



மே 2022 முதல் வரவிருக்கும் மாதங்கள் உங்களுக்கு சுமாராக உள்ளது. நீங்கள் உங்கள் கடின உழைப்பால் உங்கள் உத்தியோகத்தை பாதுகாத்துக் கொள்வீர்கள் மேலும் அலுவலகத்தில் நடக்கும் சூழ்நிலைகளை அனுசரித்து நடந்து கொள்ள முயற்சிப்பீர்கள். உங்களுடன் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் மேலாளருடன் இருக்கும் உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கான முக்கியத்துவத்தை நீங்கள் பெரும் போது தன்னம்பிக்கையையும் பெறுவீர்கள். இருப்பினும், நீங்கள் பதவி உயர்வு மற்றும் போனஸ் போன்ற பலன்களை எதிர்பார்த்தால், அது இந்த 2022 ஆம் ஆண்டு நடப்பது சற்று சந்தேகமே. சனி பகவானின் நிலையால், நீங்கள் கடினமாக உழைத்தாலும் பெரிதாக பணம் ஈட்ட முடியாமல் போகலாம். மேலும் குரு சிறப்பான இடத்தில் சஞ்சரிக்கவில்லை என்பதால், நீங்கள் பொறுமையாக இருந்து உங்கள் வளர்ச்சி சார்ந்த விடயங்களில் எதிர்பார்புகளை குறைத்துக் கொள்ள முயற்சிப்பது நல்லது.



Prev Topic

Next Topic