2022 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்



சனி பகவான் தங்கள் ராசியின் 3 ஆம் வீட்டில் சாதகமான நிலையில் சஞ்சரிப்பதன் பலத்தால் தொழில்முனைவோர்கள் நல்ல அதிர்ஷ்டங்களைப் பெறுவார்கள். ஏப்ரல் 14, 2022 வரை குருவின் ஆதரவு குறைவாக இருப்பதால் உங்கள் வளர்ச்சி மிதமாகவே இருக்கும். ஆனால் ஏப்ரல் 14, 2022 முதல் இந்த ஆண்டின் வரவிருக்கும் மாதங்கள் உங்களுக்கு சிறப்பாக உள்ளது.


உங்கள் மறைமுக எதிரிகள் பலம் இழந்து உங்கள் முன் சரணடைவார்கள். புது வணிகத்தைத் தொடங்க இது சிறப்பான நேரமாக உள்ளது. உங்கள் தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். உங்கள் பண வரத்து பல மடங்கு அதிகரிக்கும். உங்களுக்கு பெரும் அளவு லாபம் கிடைப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் லாபத்தை பணமாக்கி சேமிப்பு கணக்கில் போட்டு வைக்க இது ஏற்ற நேரம். நீங்கள் இந்த ஆண்டு புது வீடு வாங்கி அதற்கு குடிபெயரவும் இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக உள்ளது.

உங்கள் தொடக்க நிலை வணிகத்தை நல்ல விலைக்கு விற்று ஒரே இரவில் பணக்காரராகும் வாய்ப்பும் உங்களுக்கு உள்ளது. மே 2022 அல்லது நவம்பர் 2022 வாக்கில் உங்களுக்கு இதற்கான வாய்ப்பு கிடைக்கலாம். சுய தொழில் புரிவோர்கள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் நல்ல அதிர்ஷ்டன்களைப் பெறுவார்கள்.



Prev Topic

Next Topic