![]() | 2022 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
சூரியன் உங்கள் ராசியில் சிறப்பான நிலையில் சஞ்சரித்து உங்களுக்கு நிதி நிலையில் நல்லப் பலன்களைத் தருவார். ராகு மற்றும் கேது இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு அதிக செலவுகளை உங்களுக்கு உண்டாக்குவார்கள். ராகு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிற்கு ஏப்ரல் 14, 2022 அன்று பெயர்ச்சி ஆகும் நேரத்தில், நீங்கள் நல்ல அதிர்ஷ்டங்களைப் பெறத் தொடங்குவீர்கள். எந்த தேவையற்ற செலவுகளும் இருக்காது. ஆனால் பல வழிகளில் இருந்தும் உங்களுக்கு பண மழைப் பொழியும்.
நீங்கள் இந்த ஆண்டு உங்கள் கடனை முற்றிலுமாக அடைத்து விடுவீர்கள். உங்கள் சேமிப்பு கணக்கில் அதிகரிக்கும் பணத்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புது வீடு வாங்க அல்லது சொத்துக்களில் முதலீடு செய்ய இது நல்ல நேரமாக உள்ளது. சூதாட்டம் மற்றும் ஸ்பெகுலேடிவ் போன்ற விடயங்களில் உங்களுக்கு அதிர்ஷ்ட்டம் கிடைக்கும். மேலும் பூர்வீக சொத்துக்கள், வழக்கு அல்லது இன்சூரன்ஸ் மூலம் கிடைக்கும் செட்டில்மென்ட் போன்றவற்றிலும் இருந்து உங்களுக்கு பண வரத்து உண்டாகும்.
உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் இந்த ஆண்டு பணக்காரராகும் வாய்ப்பும் உள்ளது. உங்களால் முடிந்த நற்காரியங்கள் மற்றும் தானம் தர்மம் போன்றவற்றை செய்ய முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic