2022 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

ஜனவரி 01, 2022 முதல் ஏப்ரல் 14, 2022 வரை குறிப்பிடத்தக்க வளர்ச்சி (70 / 100)


குரு உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டில் இந்த பாகத்தில் சஞ்சரிப்பார். சனி பகவான் உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த பாக காலகட்டத்தில் நல்ல அதிர்ஷ்டங்களைத் தருவார். ஆனால் ராகு மற்றும் கேது நல்ல நிலையில் சஞ்சரிக்கமாட்டார்கள். ஆனால் சனி பகவானின் பலத்தால் நீண்ட கால அடிப்படையில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள்.
நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள். உங்களுக்கு உங்கள் வாழ்க்கைத்துனையுடன் சில பிரச்சனைகள் இருந்தாலும் அதனை நீங்கள் சரி செய்து விடுவீர்கள். இந்த பாகத்தில் விடயங்கள் உங்கள் கட்டுபாடிற்குள்ளேயே இருக்கும். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற நேரம். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல புகழையும், செல்வாக்கையும் பெரும்.


உங்கள் உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பான பலனைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல பாராட்டுகள் கிடைக்கும். உங்கள் செயல்திறனைக் கண்டு உங்கள் முதலாளி மகிழ்ச்சி அடைவார். தொழில்முனைவோர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த ரிஸ்க் எடுக்கலாம். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடுகள் செய்ய இது நல்ல எரம். ஆடம்பர கார் வாங்கவும் விடயங்களில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள்.
இந்த காலகட்டத்தில் பயணம் உங்களுக்கு நல்லப் பலனைத் தரும். உங்கள் விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் ஒப்புதல் பெரும். இது நல்ல பாகம் என்றாலும், உங்களுக்கு குருவின் பலம் குறைவாக இருப்பதால் அதிர்ஷ்டங்கள் மெதுவாகவே வரும்.



Prev Topic

Next Topic